பள்ளியிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய ஆசிரியர்! கலங்க வைக்கும் காட்சி
ஆசிரியர் ஒருவர் தனது பணி நிறைவு நாளில் வெளியேறும் நிலையில், பிரியா விடை பெற்று கண்ணீருடன் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதுகெலும்பாக இருக்கும் ஆசிரியர்
ஆசிரியர்கள் நம் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், மாணவர்களின் வழிகாட்டும் சக்தியாக திகழ்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் ஒரு மாணவரின் வாழ்க்கையில் பலவித ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு மாணவர்களை வழிநடத்தும், ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து பணிநிறைவு பெற்றால் மாணவர்கள் அழுது புலம்புவார்கள்.

கண்ணீருடன் ஆசிரியர்
குறித்த ஆசிரியர் தனது 22 வயதில் பள்ளியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது 50 ஆண்டுகள் பணி முடித்து நிறைபெற்ற நிலையில், மாணவர்களும், ஆசிரியர்களும் பிரியா விடை அளிக்க வரிசையில் நிற்கின்றனர்.
மேலும் பள்ளிக் கட்டிடத்தில் நடந்து செல்கையில், அனைவரும் அவரை பாராட்டி வழி அனுப்புகிறார்கள். இந்த காட்சியை அவரது மகள் கேத்தரின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.