இரண்டு கைகள் போன பிறகும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் நபர்.. ஷாக்கான நடிகர் மாதவன்
இரண்டு கைகளையும் இழந்த ஒருவர், பனி படர்ந்த சூழ்நிலையில் கோடாரியால் விறகுகளை வெட்டும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கைகள் இல்லையென்றாலும் தன்னுடைய கழுத்துப் பகுதியில் குறித்த நபர் கோடாரியை பிடித்து வெட்ட, மரக்கட்டைகள் இரண்டாக பிளந்து தெறிக்கின்றன.
சமுக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் "உடல் குறைபாடுகள் தடை கிடையாது. நம்முடைய மனம் தான் மனித குலத்திற்கு மிகப்பெரிய தடைகளை தோற்றுவிக்கும்" என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
If there is a will, there is a way.
— John Pompliano (@JohnPompliano) May 4, 2022
Much respect to this guy for getting the job done despite adversity ?? ?? ?? pic.twitter.com/ItCT5XKwsZ
இன்னொருவர்,"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்" என கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் குறித்த வீடியோவை நடிகர் மாதவனும் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்துவருகின்றன.