அம்மா அடிக்குறாங்க! புகார் கொடுத்த 3 வயது குழந்தை- ஷாக்கான போலீஸ்
சிறுவன் ஒருவன் தனது தாய் தன்னை அடித்ததற்காக காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்த விவகாரம் தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகாரில் தனது தாய் தன்னை சாக்லெட் மற்றும் இனிப்பு பண்டங்களை சாப்பிட அனுமதிக்கவில்லை.
அதையும் மீறி சாப்பிட்டால் அடிப்பதாகவும் சிறுவன் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனை அந்த காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து அந்த சிறுவனின் தந்தை ஆவார். அந்த சிறுவனின் கண்களுக்கு அவனின் தாய் மைவைத்துக்கொண்டிருந்தார்.
தாய் மீது 3 வயது சிறுவன் புகார்
அப்போது சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன் தாய் எவ்வளவு கூறியும் கேட்காமல் இருந்துள்ளான். அவனை அதட்டியதாக தெரிகிறது.
அழுதுகொண்டே இருந்த அந்த சிறுவன் தந்தை வந்ததும் புகார் தெரிவித்துள்ளான். அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறிய அந்த சிறுவன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளான்.
3-year-old gets angry with mother, goes to the police station to file a complaint, says "mother steals my toffees, put her in jail."#BacheManKeSache pic.twitter.com/AJi99stkdX
— Weisel?? (@weiselaqua) October 18, 2022
இந்த நிகழ்வு காவல் துறையினரையே நகைச்சுவைக்கு உள்ளாகியது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.