சாலையில் திடீரென வந்த கரடி - பதறிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ
சாலையில் திடீரென வந்த கரடியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் திடீரென வந்த கரடி
பொதுவாக கரடிகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் காணப்படுகிறது. இவை குட்டை வால் கொண்டவை. கரடிகளில் சூரிய கரடி மிகச் சிறியது. இவை பெரும்பாலும் 50 கிலோ குறைவான எடை கொண்டிருக்கும். கரடிகளில் மிகப் பெரியது கோடியாக் கரடி. இந்த கரடி 720 கிலோ எடை கொண்டிருக்கும்.
கருப்பு கரடிகள் அமெரிக்கா, கனடாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. பார்க்க அழகாகத் தெரியும் இந்த கரடி சில நேரங்களை மனிதர்களையும் தாக்கிவிடும் அபாயம் உள்ளது. கரடிகள் தாக்கி பலர் உயிரிழந்தனர் என்று செய்திகள் கூட அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் கூட கரடி ஒன்று 3 இளம் பெண்களை மடக்கி தாக்காமல் சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
அதேபோல், தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 3 இளைஞர்கள் காட்டுச் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில், ஒரு பெரிய கருப்புக் கரடி சாலையில் நடந்து வந்தது. இதைப் பார்த்த 3 இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்து பயந்து நடுங்கினர்.
எங்கே அந்த கரடி ஓடி வந்து தாக்கிவிடுமோ என்று. ஆனால், அந்த கரடியோ யாரையும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக சாலையில் நடந்து சென்றது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.