Viral Video- சமையல்காரர்களை ஓட விடும் புதிய கண்டுபிடிப்பு
ஆளே இல்லாமல் சமையல் செய்யும் புதிய இயந்திரத்தின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பொதுவாக பெண்களை எடுத்து கொண்டால் மூன்று வேளைகளும் சமைப்பது என்பது பெரிய டாஸ்க்காக இருக்கின்றது.
ஆரம்ப காலங்களில் அடுப்பில் சமையல் செய்த பெண்கள் தற்போது இலத்திரனியல் அடுப்பிலுகளில் சமைத்து வருகிறார்கள்.
வீடுகள் மட்டுமல்ல சில உணவகங்களிலும் இந்த முறை மாற்றம் பெற்றுள்ளது.
இனி ஆள் சமையல்காரர்கள் தேவையில்லை..
இந்த நிலையில், ஆளே இல்லாமல் சமையல் செய்யும் இந்திரத்தின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொருட்களை போட்டால் மாத்திரம் போதும் அதுவாக சமையல் செய்து சாப்பாட்டை வெளியில் தருகின்றது. இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள் நம்மை ஒரு நிமிடம் ஊமையாக்கின்றது.
அந்த வகையில் இந்த இயந்திரத்தை நம் வீட்டிலுள்ள பெண்கள் பார்த்தால் கண்டிப்பாக சந்தையில் இந்த இயந்திரத்திற்கு தட்டுபாடு நிலவும்.
மேலும் வீடியோ பார்த்த இணையவாசிகள், “ இந்த இயந்திரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.