இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் (Surya Nutan) என்ற சூரிய அடுப்பை அறிமுகம் செய்தது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யா நூதன் அடுப்பு
சூர்யா நூதன் அடுப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு, தொழில்நுட்பம் கொண்டதாகும்.
இந்த அடுப்பை மாடியிலோ அல்லது வீட்டின் வெளியே வெயிலிலோ வைத்து சமைக்க வேண்டிய தேவையில்லை. வீட்டின் உள்ளே வைத்து எளிமையாக சமைக்கலாம்.
இதில் ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும், சூர்ய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் இடம்பெற்றுள்ளது
ஆரம்பத்தில், தயாரிப்பின் விலை அடிப்படை மாடலுக்கு ரூ. 12,000 மற்றும் டாப் மாடலுக்கு 23,000. இருக்கலாம். ஆனால் எரிவாயு செலவு இல்லாமல் சமையல் செய்யலாம்.
இந்தியன் ஆயில் கேஸ்ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகிய இடங்களில் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்மைகள்
- பருவமழை மற்றும் கடுமையான குளிர்காலம் போன்ற வெயில் இல்லாத காலங்களிலும், வானிலை மாற்றங்களிலும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படலாம்.
- நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான உணவையும் காலை, மதியம், இரவு மூன்று வேலைகளிலும் சமைக்க முடியும்.
- சிலிண்டருக்கு அதிகம் செலவழிக்க தேவையில்லை.
- கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியற்றில் இருந்து சமையல் செலவைக் குறைக்க முடியும்.
- மக்கள் செலவை குறைத்து பணத்தை சேமிக்க முடியும்
- இயற்கையான சூரிய சக்தியை பயன்படுத்துவதால் சூழலுக்கும், மக்கள் நலன் பயக்கும்.