ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்: அசால்டாக இளைஞரை கீழே தள்ளிய சக பயணி
ஓடும் ரயிலில் இருந்த இளைஞரை, சக பயணியொருவர் கீழே தள்ளிவிடும் காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஹவுராவில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சாஜல் என்பவர், தனது நண்பர்களுடன் அதிக சத்தத்துடன் பேசி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பயணி, அவர்களை அமைதியாக இருக்குமாறு பல தடவைகள் கூறியுள்ளார். அவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் அவருடன் சாஜல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோ பதிவு
இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதால் பிர்பும் பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் சாஜலை அப்பயணி ரயிலை விட்டு வெளியே தள்ளிவிட்டுள்ளார்.
இதன் போது எடுக்கபட்ட வீடியோ காட்சி இணையவாசிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
This is totally Shocking...
— मुंबई Matters™✳️ (@mumbaimatterz) October 17, 2022
from #WestBengal
After an altercation a passenger pushed another out of a moving express train & coolly went back to his seat.#IndianRailwayspic.twitter.com/wO0JuBmddX