திருமணத்திற்கு முன்னரே தம்பதிகளாக ஜொலிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! தீயாய் பரவும் புகைப்படம்
திருமணத்திற்கு முன்னமே ஜோடியாக வலம் வரும் அமிர்- பாவனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் செய்த சாதனை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “ரெட்டை வால் குருவி”, “தவணை முறை வாழ்க்கை” போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகை பாவனி.
இந் நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வரும் போது பாவனியாக சென்றவர் அமீர்- பாவனியாக தான் வெளியில் வந்தார்.
அப்போதும்கூட “அமிர் என்னுடைய நல்ல நண்பர்” எனக் கூறி வந்தார் பாவனி.
ஆனால் காலப்போக்கில் இவர்கள் காதலிப்பதை கேமராவின் முன் ஒப்புக்கொண்டார்கள். இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
சேலையில் அமிருடன் புகைப்படம் வெளியிட்ட பிரபலம்
இப்படியான ஒரு நிலையில் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அவ்வப்போது ஜோடியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பாவனி சேலையில் அமிருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.
இவர்களை பார்த்த நெட்டிசன்கள், “ வர வர உங்கள் சேட்டைகள் தாங்க முடியவில்லை” எனவும் “என்ன தான் பண்ணாலும் நீங்கள் விக்கி - நயன் ஆக முடியாது” எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.