பர்சனல் மேட்டரை எடுத்த கமலுக்கு அதிர்ச்சி கொடுத்த பாவனி!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இறுதி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நேர்ந்த கொடுமைகளை சொல்லி பாவனி வீக்கெண்ட் எபிசோடில் வெளுத்து வாங்குவார் என பார்த்தால் "எந்த இது சார்" என கேட்டு கமலுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒரு பெண்ணின் பர்சனல் மேட்டர் பற்றி ராஜு, சிபி உள்ளிட்டவர்கள் பேசியதை கமல் கண்டிக்க வேண்டும் என குரல் கொடுத்து வந்த பாவனி ஆர்மியினருக்கு பல்பு கொடுக்கும் விதமாக பாவனி சமாதானம் ஆனதும் தற்போது ஒன்றுமே நடக்காதது போல பாவனி பேசுவதையும் பார்த்தால் அந்த மேட்டரை டைல்யூட் பண்ண பிக் பாஸ் குழு போட்ட திட்டமாகவே தெரிவதாக நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.
எப்படியும் தவறு செய்தவர்களை நடிகர் கமல் வச்சு செய்வார் என்று பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.