இட்லியை ருசித்து சாப்பிடும் வெளிநாட்டு செஸ் வீரர்கள்! கிளாஸ் எடுக்கும் தமிழர்கள்!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வெளிநாட்டு வீரர்களின் ட்வீட்டிற்கு, நமது நெட்டிசன்கள் ஜாலியாக கமென்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
வெளிநாட்டு வீரர்கள் பலரும் செஸ் ஒலிம்பியாட்டில் உற்சாகமாகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்காகக் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழ்நாடு அரசு சார்பில் மிக உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும், நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் அனைத்தும் மிக சிறப்பாக நடந்துள்ளதாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிளாஸ் எடுக்கும் தமிழர்கள்
அப்படித்தான் பிரான்ஸ் நாட்டின் செஸ் சாம்பியனும் கிரான்ட் மாஸ்டருமான ஆண்ட்ரியா நவ்ரோடெஸ்கு தனது ட்விட்டர் பக்கத்தில், "15 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஒரு அழகிய இடத்தில் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது! மிகவும் அன்பான வரவேற்பு.. நமஸ்தே" என்று பதிவிட்டு இருந்தார்.
அற்கு நமது நெட்டிசன்கள் தமிழ்நாட்டில் நமஸ்தே என்று கூற மாட்டோம்.. வணக்கம் என்றே கூறுவோம் என்று குறிப்பிட்டார். இதை ஆண்ட்ரியாவும் ஏற்றுக் கொண்டு வணக்கம் என்று குறிப்பிட, அது லைக்ஸ் அள்ளியது.
அதேபோல செஸ்சேமில் தலைவர் கீர்ட் வான் டெர் வெல்டே இட்லி படத்தைப் பதிவிட்டு, அருமையான ஒரு இந்திய உணவைச் சாப்பிட்டதாக ட்வீட் செய்து இருந்தார்.
இதற்கும் நம்ம நெட்டிசன்கள் சென்று, அது இந்திய உணவு இல்லை தென்னிந்திய உணவு, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் உணவு என்று பதிவிட்டுள்ளார்.


