விஜய்யுடன் டான்ஸ் ஆடும் அஜித்... AI தொழிநுட்பத்தில் புதிய அரபிக் குத்து பாடல்
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.
இது மனித முகங்களை வாயசைத்து பேசுவது போன்ற மிகை யதாரத்த வீடியோக்களை உருவாக்கி ஆச்சர்யப்படுத்துகிறது. VASA-1 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புகைப்படத்தில் உள்ள மனித முகங்களை பேசக்கூடிய, பாடக்கூடிய வீடியோக்களாக மாற்றுகிறது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழில் சூப்பர் ஹிட்டான அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் நடனமாடுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Thala Thalapathy Dance ??? pic.twitter.com/D9dNbx5y4d
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 27, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |