Kolukattai: தித்திக்கும் சுவையில் விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் மோதக கொழுக்கட்டை
விநாயக சதுர்த்தி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டு, அவரது வருகையை வீட்டிலும் கோயில்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பக்தர்கள் விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் அல்லது பொது பந்தலில் வைப்பார்கள்.
பிறகு தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகப் பெருமானை வழங்க வேண்டும்.
இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இது அனந்த சதுர்தசி நாளில் முடிவடைகிறது.
கண்டிப்பாக உங்கள் வீட்டிலும் விநாயக சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இதற்கு பிரசாதம் செய்து நீங்கள் இறைவனுக்கு படைக்க வேண்டும். அந்தவகையில் விநாயகப் பெருமானுக்கு பிடித்த மோதக கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பூரணம் செய்ய
- நெய் - 2 1/2 தேக்கரண்டி
- வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
- துருவிய தேங்காய் - 2 கப்
- பொடித்த வெல்லம் - 1 கப்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
கொழுக்கட்டை செய்ய
- அரிசி மாவு - 2 கப்
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
- சூடான நீர்
செய்முறை
1. எள்ளை ஒரு கடாயில் பொன்னிறமாகும் வரை வறுத்து, பின் தனியாக வைக்கவும்.
2. கடாயில், நெய் சேர்த்து, துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை இதை வறுக்கவும்.
3. இப்போது வெல்லத்தை சேர்த்து, அது முழுவதுமாக உருகும் வரை வதக்கவும். தொடர்ந்து கலக்கவும்.
4. வெல்லம் முழுவதுமாக உருகியதும், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும்.
5. பிறகு இந்த கலவையில் வறுத்த எள்ளைச் சேர்க்கவும்.
6. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, கூடுதல் சுவைக்காக நெய் சேர்க்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து, அதில் உப்பு சேர்க்கவும்.
8. அதை நன்றாக கலந்து, எண்ணெய் சேர்க்கவும்.
9. அனைத்தையும் நன்கு கலந்தவுடன், சூடான நீரை ஊற்றி , சிறிது எண்ணெய் சேர்த்து மாவை பிசையவும்.
10. மாவின் மீது சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
11. ஒரு அச்சை எடுத்து, ஓரத்தில் அரிசி மாவை வைத்து நடுவில் தேங்காய் பூரணம் வைத்து அடுக்கவும்.
12. இப்போது சிறிது மாவைக் கொண்டு வெளிப்புறப் பகுதியை முழுவதுமாக மூடி, அச்சுகளைத் திறக்கவும்.
13. அனைத்துயும் இதேபோல் தயார் செய்து, என்னை தடவிய தட்டில் வைக்கவும்.
14. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், இட்லி தட்டில் கொழுக்கட்டையை வைத்து, மூடி, 10 நிமிடம் வேகவைக்கவும்.