திருமணத்திற்கு சேர்த்து வைத்த 10 லட்சம்! இளைஞர் செய்த தரமான காரியம்
திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது சொந்த ஊருக்கு இளைஞர் செய்த காரியம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.
திருமணத்திற்கு சேர்த்த பணம்
திண்டிவனத்தை அடுத்த தென்கோடிப்பாக்கம் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது நல்லூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிவரும் நிலையில், இவரது கிராமத்திற்கு 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக, மழை பெய்தாலே மண் சாலையாக இருக்கும் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியாக மாறிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால் பல மேல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை. அதனால் இளைஞர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

சொந்தமாக ரோடு போட்டு அசத்தல்
தன்னுடைய திருமணத்திற்காக, ஏற்கனவே சம்பாதித்த பணத்தில் இருந்து சேமித்து வைத்திருந்த சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, 14 அடி அகலத்திற்கு, சுமார் 280 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலையும் அவரது கிராம பகுதியில் அமைத்துள்ளார் சந்திரசேகரன்.
ஆரம்பத்தில் இந்த சிமெண்ட் சாலையை அமைப்பதற்கு ஊரில் உள்ள ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று குறித்த வேலையை செய்துள்ளார்.
சந்திரசேகரின் இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
