கிராமத்து ஸ்டைல் Black Curry Fry செய்வது எப்படி?
Village Black Curry Fry: கிராமத்து ஸ்டைலில் அசைவ பிரியர்களுக்கு பிடித்த Black Curry Fry எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவாக இருப்பது ஆட்டு ரத்தம் ஆகும். இதனை பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபி தான் Black Curry Fry ஆகும்.
காரசாரமான மசாலாக்களுடன் செய்யப்படும் இந்த உணவுகளை அவ்வளவாக வீடுகளில் செய்யப்படுவதில்லை. ஆனால் கிராமத்து மக்கள் ஆட்டு ரத்தத்தினை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் சற்று வித்தியாசமான செய்யப்படும் இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
ஆட்டு ரத்தம் – தேவையான அளவு
எண்ணெய் – 2 கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 கரண்டி
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
கசகசா – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 கரண்டி
கொத்தமல்லித் தூள் – 1 கரண்டி
புதினா இலைகள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை
முதலில் ஆட்டு ரத்தத்தினை பாதுகாப்பான முறையில் கொடுக்கும் கடையில் வாங்கிக் கொள்ளவும். தேவையற்ற கழிவுகள் இல்லாமல் வாங்குவதுடன், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ரத்தத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாய் ஒன்றனை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, கிராம்பு, ஏலக்காய், கசகசா இவற்றினை சேர்த்து வதக்கிய பின்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு மஞ்சள் துஸள், புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது இவற்றினை நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது வெட்டி வைத்த ரத்தத்தினையும் கடாயில் சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.
தொடர்ந்து மூடியை திறந்து மெதுவாக கிளறிவிட்டு, தேவையான உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். நன்றாக மசாலா எல்லாம் கலந்து கிளறியதும், மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் சமைக்கவும்.

மசாலாக்கள் ஆட்டு ரத்தத்தில் நன்றாக கலந்திருக்க வேண்டும். அவ்வப்போது மெதுவாக கிளறி விட்டு அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பின்பு கொத்தமல்லி இலையை சேர்த்து ரத்தம் நன்றாக வெந்துவிட்டதை உறுதி செய்த பின்பு இறக்கவும். தற்போது சுவையான ஆட்டு ரத்தத்தில் செய்யப்பட்ட ப்ளாக் கறி ப்ரை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |