கிராமத்து பாணியில் வீடே மணக்கும் மட்டன் குழம்பு
பொதுவாக அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் மட்டன் குழம்புக்கென ஒரு தனியிடம் இருக்கின்றது.
குறிப்பாக அசைவ சமையல் என்றாலே கிராமத்து முறை தான் முதலிடம் வகிக்கின்றது. கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து மட்டன் குழம்பு வைத்தால் சொல்லவா வேண்டும்?
அரைத்த மசாலாக்களின் வாசனை வீடே மணக்கும். குழம்பை பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான மட்டன் குழம்பை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - ½ கிலோ கிராம்
தனியா - 4 தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
சோம்பு - 3/4 தே.கரண்டி
மிளகு - 3/4 தே.கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 15
இஞ்சி - 2 சிறிய துண்டு
கறிவேப்பிலை - 10
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ½ தே.கரண்டி
சின்ன வெங்காயம் 5
தக்காளி - 1
சோம்பு -½ தே.கரண்டி
பச்சை மிளகாய் - 1
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவிட்டு நல்லா பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கொஞ்சமாக குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் மட்டன், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
மட்டன் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு தேவையானளவு தண்ணீ்ர் சேர்த்து குக்கரை மூடி 2 தொடக்கம் 3 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
இறுதியில் குக்கரை இறக்கி ஆறியதும் திறந்தது கொத்தமல்லி இலை தூவினால் அவ்வளவு தான் கிராமத்து பாணியில் அசத்தல் மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |