stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி
மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.
பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை இதுகுறிக்கிறது.
பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி மருத்துவ உதவியைப் பெற்றால், இறப்பு அல்லது இயலாமைக்கான வாய்ப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறையும் போது அந்தப் பகுதி செயல்படாமல் போகும்பட்சத்தில் உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போகும் நிலை ‘பக்கவாதம்’என்று குறிப்பிடப்படுகின்றது.
பக்கவாதம் ஏற்படுதவற்கான காரணங்கள்
பொதுவாகவே மூளையில் வலது, இடது என்று இரண்டு பகுதிகள் பிரிக்கப்படுகின்றது. உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும் இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றது.
அதன் காரணமாகத்தான், மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாடல் போகும்.
பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கப்படுகின்றது. காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருகின்றமையே ஆகும்.
குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக காணப்படுகின்றது.
குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வரும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பக்கவாதம் ஏற்படுதவற்கான அறிகுறிகள்
முதல் கட்ட அறிகுறியாக கைகள், கால்கள் மற்றும் முகத்தை உணர்வற்றதாக உணர வைக்கிறது. இது உங்கள் உடலின் ஒரு பக்கத்தில் மட்டுமே நிகழலாம். அதனை அலட்சியப்படுத்தினால் உடல் முடக்கம் போன்ற அபாயகரமான விளைவை சந்திக்க நேரிடும்.
பேசுவது, சிந்திப்பது அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால் அது குறித்து முறையான மருத்துவ விளக்கத்தை பெற்றுக்காள்ள வேண்டியது அவசியம். உரையாடலின் நடுவில் குழப்பமடையும் தன்மை பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்டுகின்றது.
ஒன்று அல்லது இரண்டு கண்களில் இருந்து பார்க்க முடியாவிட்டால், நீங்கள் பக்கவாதத்தை அனுபவிக்க போகின்றீர்கள் என்று அர்த்தம். பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாகும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறியாக எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலியை உணருவது குறிப்பிடப்படுகின்றது. இது சமநிலை இழப்பு, உடல் முடக்கம் அல்லது பிற பலவீனம் காரணமாக ஏற்படலாம்.
ஒற்றைத் தலைவலி உள்ள நோயாளிகளுக்கு, பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிவது சற்று சவாலான விடயமாகும்.
குறிப்பாக நடந்து செல்லும் போது தள்ளாடுவது, நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென சில நொடிகள் பேச்சு நின்றுபோகும் நிலை,பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை தோன்றும் இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது.
நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை தடுதாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பக்கவாதம் தீவிர நிலையில் இருக்கின்றது என அர்த்தமாம்.
இவ்வாறான அறிகுறிகள் வெளிதெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும் அபாயம் காணப்படுகின்றது.ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |