mutton curry: கிராமத்து பாணியில் அசத்தல் ஆட்டுக்கறி குழம்பு... எப்படி செய்வது?
பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட கிராமத்து பாணியில் செய்த குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள்.
ஆனால் கிராமத்து பாணியில் மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான முறையில் மசாலாக்களை அரைத்து தயாரிக்கப்படுகின்றது.
அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது. எளிமையாக முறையில் அசத்தல் சுவையில் எவ்வாறு மட்டன் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
ஆட்டுக்கறி
பெரிய தக்காளி
தேங்காய்
பச்சை மிளகாய்
கிராம்பு
நறுக்கிய உருளைக் கிழங்கு
மல்டிபர்பஸ் கறிமசாலா பொடி
பட்டை
கருவேப்பிலை
இஞ்சி, பூண்டு விழுது
பெரிய வெங்காயம்
மிளகாய்த் தூள்
எண்ணெய்
ஏலக்காய்
மல்லி இலை
உப்பு
செய்முறை
முதலில் ஆட்டு இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து குக்கரில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய்த் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஏற்கனவே மசாலா கலந்து வைத்துள்ள கறியையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
அதனையடுத்து குக்கரை பிரஷர் குறையும் வரையில் மாத்திரத்தில் மெல்லத் திறந்து அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து மூடி மீண்டும் ஒரு விசில் வரும் வரையில் அடுப்பில் வைக்க வேண்டும்.
அதன் பின்னர் இறக்கி வைத்து, குக்கரின் பிரஷர் இறங்கிய பின்னர் மூடியை திறந்து நறுக்கிய மல்லி தூவினால் அவ்வளவு தான் கிராமத்து பாணியில் அசத்தல் மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |