Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?
உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான்.அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.
அசைவமும் சாப்பிட வேண்டும் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் என்றால் நண்டு குழம்பு தான் சிறந்த தெரிவு. அசத்தல் சுவையில் மிகவும் எளிமையான முறையில் நண்டு குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வதக்கி அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
குழம்பிற்கு தேவையானவை
நண்டு - 3/4 கிலோ
கடலை எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிரவ விட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிதளது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 மேசைக்கரண்டி அளவுக்கு கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும், வெந்தயம், சீரகம் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் வதக்கிக்கெள்ள வேண்டும்.
அதன் பின்பு தக்காளியை அரைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
நன்றாக வதங்கியதும் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
நன்றாக எண்ணெய் பிரிந்துவரும் நிலையில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான நண்டு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |