பாட்டி ஸ்டைலில் மீன் குழம்பு வேண்டுமா? இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.
மசாலாவை அரைத்து குழம்பு வைப்பது தான் கிராமத்து ஸ்டைலில் ஸ்பெஷல். அதனால் தான் கிராமத்து மீன் குழம்பு சுவையிலும் மணத்திலும் அல்டிமேட்டாக இருக்கின்றது.
அப்படி பார்த்தவுடனே பசி எடுக்கும் வகையில் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்முறை
மீன் துண்டுகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பாதி சின்ன வதங்கியதும், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பிறகு தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து சிறுது நேரம் வதக்கியதும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்ததை சட்டியில் சேர்த்து அதனுடன் புளி சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து என்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம் பொன்னிறம் மாறும்வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு பச்சைவாசனை போனதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்னர் கரைத்து வைத்த மசாலா தண்ணிரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக சின்ன வெங்காயத்தை வதக்கி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |