வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்... அமெரிக்காவிலும் அசத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல் குழு!
பிரபல யூடியூபர்களான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் முதன்முறையாக அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வில்லேஜ் குக்கிங் சேனல்
யூடியூப் சேனல்களை ஆரம்பித்து பிரபலமானவர்கள் ஏராளம்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் இவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்.
இவர்கள் பேமிலியாக சேர்ந்து கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பிரம்மாண்டமாக சமைக்கும் காணொளிகளை பதிவிட்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள்.
இந்தியாவில் முதன்முதலில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் சமையல் யூடியூப் சேனல் என்கிற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றிருந்தது. இந்த சேனலுக்கு தற்போது 2 கோடியே 90 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனலாக வலம் வருகின்றது. ஆனால் இவர்களின் யூடியூப் சேனல் உலகம் முழுவதும் பிரபல்யம் ஆனமைக்கு மிக முக்கியக் காரணம் ராகுல் காந்தி தான்.

viral video: நவராத்திரி 2 ஆம் நாள் - துர்க்கையை அசுர வேகத்தில் அசத்தலாக அலங்காரம் செய்த ஒப்பனை கலைஞர்!
இந்த யூடியூப் சேனலில் ராகுல் காந்தி வந்தபோது, உங்களுக்கு என்ன ஆசை என குழுவினரிடம் கேட்டார். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சமைத்து காணொளிகளை பதிவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். ராகுல் காந்தியும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினரின் காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைராலகி வருகின்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுதாண்டா உண்மையாக வளர்ச்சி என கமெண்ட் செய்து வருவதுடன், அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர். இந்த காணொளியை முழுமையான காண இங்கே கிளிக் செய்யவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
