பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதமே பாடலுக்கு கூலாக டான்ஸ் ஆடும் விக்ரமன் மற்றும் ஷிவின்!
பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதமே பாடலுக்கு பைனல்ஸ் பற்றி கவலையில்லாம் விக்ரமன் மற்றும் ஷிவின் நடனம் ஆடியிருக்கிறார்கள்.
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து இன்றைய தினம் முடிவுக்கு வரவுள்ளது.
21போட்டியாளர்களுடன் ஆரம்பான இப்போட்டி மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள்.
அவ்வாறு 18 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது இறுதிகட்டத்திற்கு 3 போட்டியாளர்கள் மாத்திரம் வீட்டிற்க்குள் இருக்கிறார்கள்.
மேலும் இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரவுள்ளது.
நடனம் சொல்லிக்கொடுத்த ஷிவின்
இந்நிலையில் இன்று இறுதி நாள் என்பதால் வீட்டிற்குள் மூவருக்கும் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் ரஞ்சிதமே பாடலுக்கு விக்ரமனுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார். ரஞ்சிதமே பாடலுக்கு நடன அசைவுகளை ஷிவின் சொல்லிக் கொடுக்க, விக்ரமன் அதனை பார்த்து பின்னர் அவரும் ஆடுகிறார்.
தனக்கு பரிசாக வந்த கருப்பு நிற ஆடைகளை அணிந்திருக்கும் விக்ரமன் ஷிவினை மட்டும் நடனமாட சொல்கிறார்.
அப்போது ஷிவின்," வாங்க விக்ரமன் ரெண்டு பேரும் கருப்பு ட்ரெஸ் போட்ருக்கோம். டான்ஸ் ஆடலாம். ஸ்டெப் தெரியுமா?" என கேட்டு இருவரும் நடனம் ஆடியிருக்கிறார்கள்.