ஆயிஷாவை மேடையில் கைத்தட்டி அசிங்கப்படுத்திய போட்டியாளர்! திரைக்கு வந்த குறும்படம்
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறிய ஆயிஷாவை கைத்தட்டி அசிங்கப்படுத்திய விக்ரமனின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நாளடைவில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் எலிமினேட் செய்யப்பட்டு மொத்தமாக பத்து போட்டியாளர்கள் இதுவரை வெளியேறப்பட்டுள்ளனர்.
இதில் நேற்றைய தினம் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டது. இந்த எவிக்ஷனில் ஆயிஷா மற்றும் ராம் வெளியேற்றப்பட்டார்கள்.
கடந்த வாரம் இருவரையும் வெளியேற்ற வேண்டாம் எனவும், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்றும் கமராவின் முன் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.
ஆனாலும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆயிஷாவை கைத்தட்டி ஆரவாரத்துடன் வெளியேற்றிய போட்டியாளர்
இந்நிலையில் நேற்றைய தினம் ஆயிஷா தான் எலிமினேட் என கமல் கூறிய போது விக்ரமன் கைத்தட்டி ஆயிஷாவை அசிங்கபடுத்தியுள்ளார்.
இதனை கவனித்த மணி மற்றும் மைனா இருவரும் இரவு படுக்கைக்கு செல்லும் போது விக்ரமனை வைத்து கலாய்த்துள்ளார்கள். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் விக்ரமனுக்கு வரவர நக்கல் கூடி விட்டது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
??#Biggbosstamil #Biggbosstamil6 #Ayesha #Evictadk #UnfairEvictionAyesha pic.twitter.com/gxSA4TiFBB
— Aaa (@Aaa47762947) December 11, 2022