நடிகர் விக்ரம் வெளியிட்ட முதல் வீடியோ - எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகர் விக்ரம் கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஆனால், அவர் மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தீயாய் பரவத்தொடங்கின.
இதற்கு நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
மகன் துருவும் அப்பாவுக்கு நெஞ்சில் அசௌகரியமாக உணர்ந்தார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகிறார். அவருக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார்.
இன்னும் ஒருநாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த விக்ரம் கடந்த 8 ஆம் தேதி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் முதல் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில்,‘நீங்கள்காட்டிய அன்பும் அக்கறையும் பார்த்து நான் வியந்து போனேன். என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் அக்கரைக்கும் மிக மிக நன்றி’ என்று கூறியுள்ளார்.
“I’m all right.. love all..” #chiyaanVikram pic.twitter.com/6UUjt4VBWp
— FridayCinema (@FridayCinemaOrg) July 10, 2022