விக்ரம் மகனுடன் அனுபமா காதலா? லீக்கான புகைப்படம்- உண்மையில் நடந்தது இதுதான்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரை காதலிப்பதாக புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம்
நடிகர் விக்ரமனின் மகன் துருவ் விக்ரம்“ ஆதித்ய வர்மா” என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்கினார். மாறாக அவர், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பாதியிலேயே திரைப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
இதனை தொடர்ந்து, ஆதித்யவர்மா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை வர்மா என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் இயக்குநர் பாலா வெளியிட்டார்.
இதையடுத்து தனது தந்தை விக்ரமுடன் சேர்ந்து 'மகான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
வதந்தியா இது?
இந்த நிலையில் துருவ் விக்ரம்- அனுபவமா பரமேஸ்வரன் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அனுபமாவுடன் இருக்கும் நபர் துருவ் விக்ரம் போன்று இருப்பதால், நெட்டிசன்கள் இவர் விக்ரம் மகன் தான் என செய்தியை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் தானா? என்று புகைப்படத்தில் சரியாக தெரியவில்லை.
இதற்கு முன்னர் இது போன்று நடிகர் துருவ், நடிகை பனிடாவை காதலிப்பதாக செய்தி வெளியாகின. ஆனால் அதற்கான அறிவிப்பு இரண்டு தரப்பில் இருந்தும் வெளியாகாத நிலையில், வதந்தியாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |