செல்ல மகளுடன் புது வருடம் கொண்டாடிய பாக்கியலட்சுமி நடிகை- அம்மா போலவே மகள்
பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா அன்பு மகள் மற்றும் கணவருடன் புதுவருடம் கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை பயணம்
கோவையில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.
இவர் கடந்த 2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "ராஜா ராணி" சீரியல் மூலம் சீரியல் பயணத்தை துவங்கினார். இந்த சீரியலில் கதாநாயகரின் தங்கையாக மக்களால் அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து "சிவா மனசுல சக்தி", "சாக்லேட்" மற்றும் "பாக்யலட்சுமி" போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி ரித்திகாவிற்கு பெரிய புகழை தேடி தந்தது என்றே கூறலாம்.
கணவர், குழந்தையுடன் இருக்கும் ரித்திகா
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான மகள் ஒருவரும் இருக்கிறார்.
குடும்பம், குழந்தை என செட்டிலாகிய பின்னரும் ரித்திகா அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார்.
அந்த வகையில் ரித்திகா அவருடைய செல்ல மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதல் முதலில் மகளின் முகத்தை காட்டியவுடன் சின்னத்திரை ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அத்துடன் “அம்மா போலவே இருக்கிறார் மகள்..” என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |