இப்படியா? அப்படியா? தாலி கட்டும் நேரத்தில் கன்பியூஸ் ஆன விக்கல்ஸ் விக்ரம்..வைரல் வீடியோ!
திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் கன்பியூஸ்ஸாகிய அதனை கண்டண்டாக மாற்றி, விக்கல்ஸ் விக்ரமின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விக்கல்ஸ் டீம்
வெள்ளித்திரையில் வரும் பாடல்கள் ரெக்கார்டிங் எப்படி செய்வார்கள் என நகைச்சுவையாக காட்சிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் தான் விக்கல்ஸ் டீம்.
இவர் Vikkals என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் விக்கலஸின் வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
அவ்வளவு ஏன் விஜய் தொடங்கி ஏ.ஆர் ரஹ்மான் வரை பல்வேறு பிரபலங்களும் இவர்களின் வீடியோ பாராட்டி உள்ளனர்.
சமீபத்தில் இவர்களின் வீடியோக்களுக்கு ஏ.ஆர் ரஹ்மானும் அவரின் ஆதரவை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியிட்ட விழாவில் இவர்களின் பதிவு குறித்து நடிகர் விஜய் ஒரு சில வார்த்தைகளை பேசியிருந்தார்.
திருமணத்தில் பண்ணிய கூத்து
இதனால் விக்கலஸ் குழுவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது. மேலும் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்கையில் விக்ரமுக்கு “அனிதா செல்வி” என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தை அவருடைய நண்பர்கள் , “ நம்ம வீட்டு கல்யாணம் ” என்ற தலைப்பில் விக்ரம் – அனிதாவின் திருமணத்தை லைவ் டெலிகாஸ்டிங் செய்தனர்.
இதன்போது தன்னுடைய காதலிக்கு தாலி கட்டும் போது இப்படியா..? அப்படியா? என சற்று குழம்பி விட்டார்.
அப்போது ஐயர் ஒரு சில அறிவுரைகளை கேட்டு அங்கு ஒரு காமெடியாக நடந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து மணப்பெண்ணாக இருந்த காதலி "என்னடா.. பண்ணுற " என்பது போல் தோன்ற வைத்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகளை “சொந்த கல்யாணத்தை கண்டண்டாகிய ஒரே ஆள் நீங்க தான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |