எனக்கோ எனது பிள்ளைகளுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் கவிஞர் தாமரை தான் காரணம்! அவேசமாக பேசிய விஜி
தனி மனித பெண்ணாக வாழும் எனக்கும் எனது இரு மகள்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதமோ உயரிழப்போ ஏற்பட்டால் அதற்கு கவிஞர் தாமரைதான் பொறுப்பு என விஜி தெரிவித்துள்ளார்.
தற்கொலை
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் முத்துக்குமார் - ஈஸ்வரி. இந்த தம்பதியின் மூத்த மகன் சிவா என்கிற ரத்தினசீலன் (வயது 30) எம்.பி.ஏ பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
சமீபத்தில் விஜி பழனிசாமி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட சிவா, சில தினங்களுக்கு முன் தனது மனைவி விஜி தன்னுடைய நண்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதால் அவமானம் தங்க முடியாமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும் சிவா உயிரிழந்ததற்கு அவரது மனைவி விஜி பழனிசாமி தான் காரணம் என வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கவிஞர் தாமரை
இந்த வழக்கில் கவிஞர் தாமரை முன்னதாக தெரிவித்ததாவது, “என் முன்னாள் கணவர் தியாகுவிற்கும் விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக எனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். விஜி ஆடம்பர வாழ்க்கைக்காக பலரது குடும்பத்தைச் சிதைத்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டியிருந்தார் தாமரை.
விஜியின் மறுப்பு அறிக்கை
குறித்த ஊடக அறிக்கையில் விஜி தெரிவித்ததாவது,
கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பரப்பப்படும் அவதூறு செய்திகள் பற்றி பேசப்பட்டு வருகிறது. இது பற்றி பேச என்னிடம் எதுவும் இல்லை.
தனிப்பட்ட நபர்களின் காழ்ப்புணர்ச்சியாலும், ஊடகங்களின் அறமற்ற செயல்களால் பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு என் மனநிலை இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக கவிஞர் தாமரையின் தற்குறித்தனமான தரம் தாழ்ந்த செயல்களால் நானும் எனது மகள்களும் உச்சபட்ச மனஉளைச்சலில் தான் வாழ்ந்து வருகிறோம்.
இவர்கள் எல்லாம் பரப்பும் அவதூறுகளும், மிரட்டல்களுக்கும் வயதுக்கு வந்த எனது இருமகள்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
தமிழுக்காகவும், பெண்ணுரிமைகளுக்காகவும் மட்டுமே வாழும் தாமரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல்.
ஒரு பெண் தான் பார்க்கும் நபர்களுடன் எல்லாம் தவறான உறவில் தான் இருப்பார் என்றால் அது தாமரை என்ற பெண்ணுக்கும் பொருந்தும் தானே ? சிவா மனஉளைச்சல் காரணமாகத்தான் இறந்தார்.
மேலும், நான் தனி மனிதியாக இரு மகள்களுடன் வாழும் எனக்கோ என் மகள்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதமோ உயிரிழப்போ ஏற்பட்டால் அதற்கு கவிஞர் தாமரையும், ரத்னசீலன் சகோதரியான பானுப்பிரியாவும் தான் முழுக்காரணம் என தெரிவித்துள்ளார்.