பல நபர்களுடன் தொடர்பு: என் வாழ்க்கையையும் அழிச்சிட்டா! கவிஞர் தாமரை குற்றச்சாட்டு!
தன்னுடைய வாழ்க்கையை அளித்து விட்டதாக கூறப்படும் பெண் குறித்து பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான தாமரை பகிரங்கமாகக் கூறியுள்ள விடயம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் முத்துக்குமார் - ஈஸ்வரி. இந்த தம்பதியின் மூத்த மகன் சிவா என்கிற ரத்தினசீலன் (வயது 30)
எம்.பி.ஏ பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் விஜி பழனிசாமி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட சிவா, சில தினங்களுக்கு முன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம்
விஜி ஏற்கனேவே திருமணமானவர் என்றும் 3 குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 6ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
நாளடைவில் விஜி சில நம்பர்களுடன் பழகி வருவதை அறிந்த சிவா அவருடைய செல்போனில் விஜி அவரது நண்பர்களுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை பார்த்துள்ளார்.
மீண்டும் விஜியை மன்னித்து ஏற்றுக்கொண்ட சிவா கொஞ்சம் காலம் செல்ல சில நாட்களிலேயே இருவருக்கும் மீண்டும் தகராறு நடந்து விஜியும் சிவாவும் பிரிந்துள்ளனர்.
அதற்கு பிறகு விஜி தன்னுடைய நண்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தங்க முடியாமல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
பெற்றோரின் வாக்குமூலம்
சிவா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 43ஆடியோ பதிவு செய்துள்ளார்.
அதில் நான் சாக்கடையில் விழுந்து விட்டேன் என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து குடும்ப பிரச்சினையால் தான் தற்கொலை செய்துவிட்டார் என்று வழக்கு பதிவு செய்துள்ளார் பொலிஸார்.
ஆனால் அவரது பெற்றோர்கள் தங்களுடைய மகன் தொடர்பாக பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.
கவிஞர் தாமரை
குறித்த புகாரை தொடர்ந்து கவிஞர் தாமரை தெரிவித்ததாவது, “என் முன்னாள் கணவர் தியாகுவிற்கும் விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக எனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த விஜி என்கிற விஜயலட்சுமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என கவிஞர் தாமரை தனது முகப்புத்தக பக்கத்தில் எழுதியுள்ளார்.
37 வயதான பெண் பல்வேறு ஆண்களுடன் சேர்ந்து பழகியதோடு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இப்பெண் தொடர்பில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.