மீரா மிதுனை தொடர்ந்து கைதாகப் போகும் பெண் பிரபலம்? போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை
தமிழில், ‘8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் நடித்தவர்தான் நடிகை மீரா மிதுன். இவர் விஜய் டிவி ஒளிப்பரப்பிய பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
மாடல் துறையில் வலம் வந்த நடிகை மீரா மிதுன், அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருவது இவரது வழக்கம். பல பிரபலங்களை சமூகவலைதளங்களில் வம்பு இழுத்துக் கொண்டிருந்த சூப்பர் மாடலான மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இவரை கைது செய்து செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாத்தி மாத்தி பேசி வருவதால் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீரா மிதுன் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவையும் படம் பிடித்து வெளியிட்ட குற்றத்திற்காக அவருடைய காதலரான அபிஷேக் ஷாம் என்பவரையும் போலீசார் கைது செய்து, இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மீராமிதுன் பல நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, போதைப்பொருள் பயன்படுத்தி உல்லாசமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தற்போது மீரா மிதுன் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்கவும், போதைப்பொருள் மற்றும் பல்வேறு மோசடிகளுக்கு மீரா மிதுனுடன் உறுதுணையாக இருந்த பிரபல பெண் தோழி ஒருவர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
எனவே, அந்த பிரபல பெண் தோழியும் மிக விரைவில் போலீசிடம் சிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் மீரா மிதுன் அவதூறு பேசுவது மட்டுமல்லாமல் போதைப்பொருள், மோசடி என இவரைப்பற்றிய பெரிய லிஸ்டே ஒவ்வொன்றாக தெற்போது வெளிவரத் தொடங்கி இருக்கிறது.