49 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக நடிகர்! வரலாற்று வெற்றியை பதிவு செய்த விஜய்
தமிழக வெற்றிக்கழகதின் தலைவர் விஜய் இன்றைய தினம் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
விஜயின் வெற்றி
சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அரசியலில் களமிறங்கினார்.என்பதை பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

விஜயின் இந்த நோக்கத்தில் இருந்த சுயநலமற்ற தன்மையை இன்று அவரின் அபார வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
விஜய் 2009-ல் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என அமைத்து, சமூக சேவைகள் மூலம் வாக்காளர்களிடம் நெருக்கம் பெற்றார்.

2024-ல் அவர் திரைப்படங்களை விட்டு விலகி, முழுமையாக அரசியலில் ஈடுபட்டார்.
2026ஆம்ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு, திரைப்படத்துறையில் இருந்து வந்து முதல்வராகப் பதவியேற்றவர் விஜய் என்பது வரலாற்று பதிவாக மாறியுள்ளது.

ஜெயலலிதா, MGR-ன் AIADMK-வைத் தொடர்ந்து முதல்வராக ஆனார். ஆனால், விஜய் தனது ரசிகர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியதன் முலம் தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்து இன்று வெற்றி கண்டுள்ளார்.

1977-ல் நடிகர் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து, 49 ஆண்டுகளாக எந்த நடிகரும் நேரடியாக ஒரு புதிய கட்சியை உருவாக்கி முதல்வர் பதவியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |