நீங்க உள்ளே வரக்கூடாது.. யாரும் எதிர்பார்க்காத போது கூச்சல் போட்ட விஜய்யின் தாயார் ஷோபா- பரபரப்பு நிலை
விஜய் அம்மா- ஷோபா கோயிலில் பத்திரிகையாளரை பார்த்த போது கோபத்தில் கத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.
இவரது தந்தை சினிமாவில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் தான் நடிகர் விஜயை சினிமாவிற்குள் அறிமுகம் செய்தார்.
தந்தையை போல் தாயும் சினிமாவில் ஈடுபாடுக்கொண்டவராக இருந்தார். விஜயுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
டென்ஷனான விஜய்யின் தாயார்
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் தாய் ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த பத்திரிகையாளரை பார்த்து, “ நீங்க வரக் கூடாது, வரக்கூடாது..” என கத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய்யுடன் குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகிய நிலையில் ஷோபா இப்படி நடந்து கொண்டது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை தொடர்ந்து பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுத்த விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், “ அவருடைய மனைவியின் சினிமா வாழ்க்கை பற்றியும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பேசியிருக்கிறார்.”
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |