மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் திருமணம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் விஜயகாந்த், தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் கடந்த வரும் மரணமடைந்தார். இவர் உயிரோடு இருந்த போது, இவரது மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
இன்றும் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை மறக்கமுடியாமல் மக்களும், ரசிகர்களும் தவித்து வருகின்றனர். மேலும் இன்று வரை இவர் மக்கள் மனதில் கேப்டனாகவே வாழ்ந்து வருகின்றார்.
மகனின் திருமணம்
கேப்டனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு நிச்சயம் நடந்த நிலையில், திருமணம் நடைபெறவில்லை.
ஏனெனில் விஜயகாந்தின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த காரணத்தினால் திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய பிரபாகரன் திருமணம் எப்போது நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பின்பு பிரபாகரனின் திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |