லட்சக்கணக்கில் செலவு செய்து நடிகர் விஜயகுமார் கிராமத்தில் கட்டிய புது வீடு! இத்தனை படுக்கையறைகளா...?
லட்சக்கணக்கு செலவில் நடிகர் விஜயகுமார் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கின்றார்.
நடிகர் விஜயகுமார் பிறந்து வளர்ந்த நாட்டுசாலை கிராமத்தில் தனது சொந்த வீடு இருந்த இடத்தில் தான் இந்த புதிய வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த அழகிய வீட்டில் கிட்டத்தட்ட 10 படுக்கையறைக்கு மேல் வைக்கப்பட்டுள்ளதாம்.
புதிய வீட்டின் புகைப்படத்தினை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதேவேளை, நடிகர் விஜயகுமார் தென்னிந்திய சினிமாவில் மிக நீண்ட காலம் நடிகராகக் கோலோச்சியவர். இவர் நடிக்கும் திரைப்படங்களில் வரும் குடும்பங்களை போலவே நிஜ வாழ்விலும் இவரது குடும்பம் கூட்டு குடும்பம்.
விஜயகுமாரின் காதல் மனைவி மஞ்சுளா முதலில் கதாநாயகியாகவும் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்தவர்.
அவருடைய மகன் அருண் விஜய் இன்று முன்னணிக் கதாநாயக நடிகர்களில் ஒருவர்.
மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி மூவரும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்கள். இவர்களில் வனிதாவை தவிர அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 10 படுக்கையறைக்கு மேல் வைத்து புதிய வீடு கட்டியுள்ளது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.