விஜயகாந்த் மகனுக்கு 3 வருஷமா ஏன் திருமணம் நடக்கவில்லை தெரியுமா? லீக்கான தகவல்
நடிகர் விஜயகாந்த் மகனின் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தமிழ் சோசியல் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த்.
கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
இவருக்கு பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் கடந்த 2019 டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் இந்த தாமதம் ஏற்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதோடு திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஆண்டுக்குள் விஜயகாந்தின் மகன் திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பாக கேப்டன் குடும்பத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.