இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள்
நடிகை சமந்தா வித்தியாசமான ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகின்றது.
இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்குவது இயல்பு. அந்த வகையில் வித்தியாசமான மார்டன் உடையில் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |