வாரி வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்தின் சொத்து மதிப்பு
உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்ட நிலையில் சுவாசப் பிரச்சனையின் காரணமாக இன்று
காலை காலமானார்.
மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட நடிகர் விஜயகாந்த் அரசியல், திரையுலகம், பொதுப்பணி போன்ற பல துறையில் ஈடுபட்டிருந்தார்.
MGR க்கு பிறகு நடிகராக இருந்து பின்னர் அரசியல் துறையில் பெயர்பெற்ற பட்டியலில் விஜயகாந்த் இருக்கிறார்.
அவரது வீட்டின் முன் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
விஜயகாந்த் உணவளிப்பதில் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்று நம்மில் அனைவரும் அறியக்கூடிய ஒரு விஷயமாகும்.
அதனால்
அவரை சந்திக்க வருபவர்களை முதலில் சாப்பிட வைத்து பின்னரே
அவர்களிடம் விஷயத்தை கேட்டறிவாராம். அதுமட்டுமின்றி
தன்னை சுற்றி இருக்கக்கூடிய எவரும் பசியுடன் இருக்கக்கூடாது
என்பதை கொள்கையாகவே கொண்டு வாழ்ந்தவர்.
ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம், கேப்டன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவற்றிலேயே இவரது சொத்து மதிப்பின் பெரும் பகுதியானது உள்ளது. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவரது சொத்து மதிப்பானது ரூ.53 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது.
சுமார் 2 கோடி ரூபாய் முதலீடானது அவரது எதிர்காலத்திற்காக தபால் நிலைய திட்டங்கள், NSS போன்ற அரசு முதலீட்டு திட்டத்தின் வாயிலாக சேமித்துள்ளார்.
பெரிய வாகன பிரியரான இவரிடம் Benz, Board Endeavour, Honda, Volvo கார்களும், Royal Enfield பைக், 2 Tempo Traveler ஆகியவை உள்ளது. இவரது பெரும்பாலான படங்களில் பெரிய பெரிய கார்களை பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார் விஜயகாந்த்.
2.35 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி போன்றவையானது இவர் 2016 தேர்தலில் போட்டியிடும் வேளையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாய நிலத்தையும், 11 கோடி மதிப்பிலான விவசாயமற்ற நிலங்களையும், 1 கோடி மதிப்பிலான வீட்டையும் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |