12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக சென்று தற்போது பைலிஸ்ட் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் திவ்யாவின் கடந்த வாழ்க்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிக் பாஸ் திவ்யா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், கடைசியான 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
சபரி, திவ்யா, அரோரா, விக்ரம் என நான்கு பேர் உள்ள நிலையில், இதில் திவ்யா வைல்டு கார்டு போட்டியாளராகவே உள்ளே சென்றார்.

ஆரம்பத்தில் பயங்கர சத்தம் போட்டு மிரட்டிய திவ்யா, ஒரு கட்டத்தில் அமைதியாக இருந்தார். அனைத்து பக்கத்திலும் அவருக்கு எதிரான கருத்துக்கள் வந்ததால், எதையும் குறித்து சிந்திக்காமல் தைரியமாகவே இருந்தார்.
உள்ளே இருக்கும் நான்கு போட்டியாளர்களில் திவ்யா தான் டைட்டில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது கடந்த வாழ்க்கையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நின்று போன திருமணம்
திவ்யா 12ம் வகுப்பு படிக்கும் போது இரண்டு பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். பின்பு படித்து மறுபடியும் தேர்வு எழுதி பாஸ் செய்துள்ளார்.
பின்பு அவரது அக்கா கர்ப்பமாக இருந்ததால், அவரைப் பார்த்துக் கொள்ள ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த திவ்யாவிற்கு விஸ்காம் என்ற படிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே கஷ்டப்பட்டு கல்லூரி ஒன்றிலும் சேர்ந்த அவர், சிறிய ஷார்ட்பிலிம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்பு இயக்குனரும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் உடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் 2017ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் ஒரே ஊர் என்றும் சொந்தம் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்பு இருவருக்குள் திருமணம் சரிவராது என்று திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

கடைசியாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த திவ்யா, மகாநதி சீரியலில் கம்ருதினுடனும் நடித்திருந்தார். இவ்வாறு பல கஷ்டங்களைக் கடந்து வந்த திவ்யா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருவதுடன், டைட்டில் வின்னராகவும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |