ஜெயிலர் பட வெற்றிக்கு பின்னால் இருந்து வேலை பார்த்தது விஜயா? உண்மையை உடைத்த இயக்குநர்!
ஜெயிலர் பட வெற்றிக்கு நடிகர் விஜய் நெல்சனுக்கு செல்போன் செய்து பாராட்டியுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
ஜெயிலர் வெற்றியை கொண்டாடிய பிரபலம்
தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் இயக்கியிருப்பார்.
இந்த நிலையில் பட வெளியாகி இரண்டு நாட்களில் பாரிய வெற்றியடைந்துள்ளதால் திரையுலகம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை சம்பாரித்தது. இதனை தொடர்ந்து நெல்சனின் மார்க்கட் திரையுலகில் குறைய ஆரம்பித்தது.
ஆனாலும் கதை மீதும் நெல்சன் மீதும் இருந்த நம்பிக்கையில் ஜெயிலர் திரைப்படம் படபிடிப்பு தயாராகியதாம்.
நடிகர் விஜயிற்குள் இப்படியொரு குணமா?
இப்படியொரு நிலையில் இயக்குநர் நெல்சன் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்து சில விடயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது, ஜெயிலர் பட கதையை ரஜினிகாந்திடம் தைரியமாக கூறுமாறு விஜய் தான் நெல்சனை அனுப்பி வைத்தாராம்.
அத்துடன் காலையில் நீண்ட நேரம் தூங்கும் நெல்சனை கோல் செய்து அதிகாலையில் எழுப்பி ஷீட்டிங்கிற்கு அனுப்பியது கூட விஜய் தானாம்...” என நெல்சன் மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.
பின்னர் பட வெற்றிக்கும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் நெல்சனுக்கு கோல் செய்து பாராட்டியுள்ளாராம்.
ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. லியோவும் நன்றாக இருக்கும் என மக்கள் தங்களின் பலத்த ஆதரவை கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |