Neeya naana: கணவர் சொன்ன ஒத்த வார்த்தை.. ஆசையை தூக்கி வீசிய மனைவி
கணவர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக தனக்கு பிடித்திருந்தாலும் 25 வருடங்களாக அதை நான் செய்யமாட்டேன் என பெண்ணொருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு நீயா நானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
மனைவியின் ஆதங்கம்
இந்த நிலையில், மனைவி மற்றும் கணவர் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து வாதம் நடத்தப்பட்டது. அதில் பெண்ணொருவர் பகிர்ந்து கொண்ட செய்தி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, “நான் திருமணம் செய்த புதிதில் என்னுடைய கணவர் 6 மணிக்கு வீட்டுக்கு வருவார் என தெரியாமல் நான் ஒரு 5.30 மணியளவில் மருதாணி போட்டுக் கொண்டேன். அவர் 6 மணிக்கு வீட்டிற்கு வந்ததும் என்னிடம் காபி கேட்டார். நான் ஆசையாக அவரிடம் சென்று மருதாணியை காட்டினேன்.
இந்த அழகை பார்ப்பதற்காக தான் நான் 6 மணிக்கு வந்தேனா? கழுவிட்டு காபியை போடு என்றார். அன்று தொடங்கி இன்று வரை சுமாராக 25 வருடங்களாக நான் மருதாணி போட மாட்டேன். அதிலும் குறிப்பாக என்னுடைய வளைகாப்பிற்கு கூட நான் மருதாணி போடவில்லை..” என கவலையுடன் கூறினார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “கணவன் சொன்ன ஒத்த வார்த்தைக்காக இப்படியும் ஒரு பெண் செய்வாரா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |