கதாநாயகி நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்பவர் யார்? வெளியே லீக்காகிய தகவல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கதாநாயகி நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை வெல்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கதாநாயகி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றது. ஆம் கலக்கப் போவது யார், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் என சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் தற்போது புதிய கதாநாயகிகளை தேடும் பணியில் கதாநாயகி என்ற நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது.
ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதன் நடுவராக ராதிகா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இருந்து வருகின்றனர்.
இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது நடிப்புத் திறமையைக் காட்டி வரும் நிலையில், கடந்த வாரம் செமி ஃபைனல் நடந்து முடிந்துள்ளது.
தற்போது ஃபைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இதில் டைட்டில் பட்டத்தை வென்றவர்கள் இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபீஸினா இருவரும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து வரும் புதிய சீரியல்களில் இவர்கள் கதாநாயகியாக நடிப்பது என்பது உறுதியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |