இது தான் என்னுடைய வீடு.. இடிபாடுகளுடன் இருக்கும் வீட்டிற்கு ஹோம் டூர் சென்ற ஜாக்குலின்!
பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் அவர்களின் வீடு முன்பகுதி இடிக்கபட்டுள்ளது என வெளியிட்ட வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவர் எப்படி மீடியாவிற்குள் வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானாவர் தான் ஜாக்குலின். இவர் “கலக்கப்போது யாரு” என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் 'நெல்சன் திலீப் குமார்' இயக்கத்தில் உருவான நயனின் “கோலமாவு கோகிலா” என்ற திரைப்படத்திலும் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் குறித்த தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்பாராத வெற்றியை கொடுத்தாலும் ஜாக்குலினுக்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் மீண்டும் பிரபல தொலைக்காட்சியில், “தேன்மொழி B.A ஆண்டாள் அழகர்” என்ற சீரியலில் நடித்திருந்தார்.
இடிப்பாடுகளுடன் காணப்பட்ட ஜாக்குலின் வீடு
இந்த நிலையில் ஜாக்குலின் அவர்களின் வீட்டை இடித்து அந்த வீட்டை கொஞ்சம் அழகாக்கி கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனை பார்க்கும் போது பெரிய செலவில் கட்டுவது போல தான் தெரிகிறது. இந்த வீட்டையும், அவரின் நாயை சுற்றிக் காட்டி அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ மீடியாவிற்கு வந்தவர்கள் எல்லாமே பெரிய பெரிய வீட்டை கட்டி வருகிறார்கள்.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.