வெறித்தனமான ஒர்க் அவுட்- காதல் கணவனுடன் வெளியான படங்கள்.. வியப்பில் சின்னத்திரை
தெலுங்கு பிக்பாஸ் பிரபலம் ப்ரியங்கா ஜெயின் கணவருடன் எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை பிரியங்கா ஜெயின்
பிரபல தொலைக்காட்சியில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் நடிகர்கள் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். பலர் சீரியல்களின் மூலம் பிரபலமாகி வெள்ளத்திரையில் முன்னணி நடிகர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “காற்றின் மொழி” சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ்வுடன் நாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை பிரியங்கா ஜெயின்.
இவர், இந்த சீரியலில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் படு மார்டனாக திரியும் ஒரு பெண்.
மேலும், பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். ஒரு மாடலாக பயணத்தை துவங்கிய பிரியங்கா கன்னட படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார்.
வெறித்தனமான ஒர்க் அவுட்
இந்த நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியில் காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகமாகிய இவர், தற்போது பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான “ரங்கிதரங்காவில்” என்ற படத்திலும் நடித்தார்.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 5ஆவது இடத்தை பிடித்து கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, ஜும்மில் கணவருடன் எடுத்துக் கொண்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |