பழைய வாழ்க்கையை மொத்தமாக மறந்த விஜய் ரிவி நடிகை... நடந்தது என்ன?

Manchu
Report this article
பிரபல ரிவி சீரியலில் நடித்த நடிகை அஸ்ரிதா ஸ்ரீதர் விபத்தில் சிக்கி தனது பழைய நினைவுகளை இழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகை அஸ்ரிதா ஸ்ரீதர்
பிரபல ரிவி சீரியலான தமிழும் சரஸ்வதியும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதர்.
மேலும் சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் நடித்த இவர், கேரளாவைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு புரோடக்ஷன் மேனேஜர் என்பதாலும், இவரின் தயார் ஒரு சீரியல் நடிகை என்பதாலும், படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
அஸ்ரிதா 15 வயதாக இருக்கும் போது அவரது தந்தை உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார். தந்தை இறந்த நிலையில் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள அவரது தாய் தொலைக்காட்சி தொடரிலிருந்து விலகினார்.
பின்பு குடும்ப சூழ்நிலையால் நடிப்பிற்குள் நுழைந்த அர்ஷிதா சினன்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அஸ்ரிதா தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பழைய வாழ்க்கையை மறந்த அஸ்ரிதா
நடிகை அஸ்ரிதாவிற்கு ஏற்பட்ட விபத்தில் மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு, பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துள்ளார்.
சில நேரங்களில் ஞாபகம் வந்தாலும், அதிகமாக யோசிப்பதால் தலைவலி ஏற்படுவதாகவும், அதற்கு பல்வேறு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனது வேலையை எதுவும் என்னால் செய்ய முடியாமலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நான் வாழ்க்கையை வெறுத்தேன். ஆனாலும் எனது மன உறுதி என்னை கைவிடவில்லை என்றும், என் தந்தையின் ஆசீர்வாதமும், மக்களின் அன்பும் மட்டுமே தன்னை மீண்டும் நடிக்க வைத்துள்ளது.
தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பேன் என உணர்வு பூர்வமாக பேசியுள்ளார் அஸ்ரிதா. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
