மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி
thirupaachi re release : விஜய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் மாஸ் காட்ட வருகிறது. இத் திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திருப்பாச்சி
விஜய் – திரிஷா ஜோடியில் வெளியான இப்படத்தில், விஜய்யின் தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். இவர்களுடன் பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய்யின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், தங்கச்சி சென்டிமென்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்ததுடன், தீனா, மணிசர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் துள்ளலான இசையும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
2005-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், விஜய்யின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒன்றாக மாறியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘அன்னவரம்’ என்றும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

மீண்டும் திரையரங்குகளில் ‘திருப்பாச்சி’
கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடினர். அந்த ரீ-ரிலீஸ் உலகம் முழுவதும் சுமார் ரூ.26 முதல் ரூ.30 கோடி வரை கூடுதல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் மற்றொரு மாஸ் படமான ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
வரும் அக்டோபர் 1-ம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |