ஜப்பானில் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஜப்பானில் விஜய்க்கு விருது அறிவித்து கவுரவிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஜப்பானில் கிடைத்த கவுரவம்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
தற்போது நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் ஒசாகா என்ற தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.
இதில், சிறந்த நடிகருக்கான விருது ‘மாஸ்டர்’ படத்தில் அசத்தலாக நடித்த நடிகர் விஜய்க்கும், சிறந்த நடிகைக்கான விருது மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் கிடைத்துள்ளது.
ஜப்பானில் தனக்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததற்கு நடிகை கங்கனா ரனாவத் சமூகவலைத்தளங்களில் நன்றியை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கியத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்திற்கு மட்டும் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.