உலகமே கொண்டாடிய அந்தவொரு சம்பவம்! மௌனம் காக்கும் விஜய்
சந்திராயன் 3 பற்றி நடிகர் விஜய் வாய் திறக்காமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்குள் நுழையும் விஜய்
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வசூல் மன்னனாக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியாகியது. இதன் பின்னர் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து தளபதி 68 ற்கான வேலைகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் நடிகர் விஜய் சினிமாவிற்கு மூன்று வருடங்கள் விடுமுறைக் கொடுத்து விட்டு அரசியலில் அதீத நாட்டம் காட்டவுள்ளராம்.
இதற்காக மக்களுக்கு தேவையான பல வேலைகளை செய்து வருகிறார்.
ஒரு காலத்தில் அரசியல் பக்கம் வர போவதில்லையென கூறியவர் எப்படி வந்தார் என ரசிகர்களுக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டாரா?
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எங்கு திரும்பினாலும் சந்திராயன் 3 தொடர்பிலான செய்திகள் தான் வைரலாகி வருகின்றது.
ஆனால் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் விஜய் இது குறித்து எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருப்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், நடிகர் விஜயிற்கு எதிராக இப்படியொரு கேள்வி எழும் பொழுது, “ஒரு நடிகரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பற்றி ஆராய்வது என்பது நல்லது அல்ல.
சந்திராயன் 3 பற்றி பேசாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு இந்தியா மீது அக்கறை இல்லையா என்ன?" என சித்ரா லட்சுமணன் என்பவர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |