நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3... தயாரிக்க செலவான மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா?
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா செலுத்திய விண்கலம் தற்போது நிலவை சென்றடைந்து ஆய்வு செய்து வருகின்றது.
இவ்வாறு நிலவைத் தொட்ட சந்திராயனை தயாரிக்க எவ்வளவு செலவாகியிருக்கிறது தெரியுமா?
சந்திராயனின் விலை
நிலவிற்கு சந்திராயனை தரையிறக்க வேண்டும் என்பது மூன்றாவது திட்டம் தான் இந்த சந்திராயன் 3 ஆனால் இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் திகதி விண்ணிற்கு செலுத்தப்பட்ட சந்திராயன் 2ஐ தயாரிக்க 470 கோடி ரூபா செலவாகியிருக்கிறது.
சந்திராயன் 1 செலுத்தி அது தோல்வியில் முடிய இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி.எம்.கே என்ற ராக்கெட்டின் உதவியுடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியும் தோல்வியடைந்தது. ஆனால் இந்த சந்திராயன் 2ஐ தயாரிப்பதற்கு 978 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.
சந்திராயன் 1 மற்றும் 2 இவை இரண்டும் தோல்வியை சந்திக்கவே மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கிய இஸ்ரோ சந்திராயன் 3ஐ கடந்த மாதம் அனுப்பி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சந்திராயன் 3ஐ தயாரிக்க மொத்தமாக 615 கோடி ரூபா மட்டும் தான் செலவாகியிருக்கிறது அதன் செயற்கைகோலை தயாரிக்க 375கோடியும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் நேவிகேசனை தயாரிக்க 603 கோடியும் செலவாகியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |