viral video: எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... வைரலாகும் விஜயின் அதிரடி பதிவு!
கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பின்னர் நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளத்தில் மிகவும் எமோஷனலாக பேசி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
விஜயின் அதிரடி பதிவு
நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த நிலையில், அன்றிரவே கரூர் மக்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார் விஜய். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கரூர் பேரணி நெரிசல் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, விஜய், உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து, சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் என்று உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றி குறிப்பிட்ட விஜய், “பழிவாங்க நினைத்திருந்தால், நீங்கள் எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என் கட்சியினரைத் தொடக்கூடாது” எனவும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். பின், CM சார் என்ன பழிவாங்கும் எண்ணம் இருந்தால், நான் என் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன் என்ன என்னவேணுமாலும் பண்ணுங்க" என கூறியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |