நடிகர் விஜய் மகன் இயக்கும் குறும்படம்! வைரலாகும் வீடியோ
இளையதளபதி நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் குறும்பட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய், வயதானாலும் உங்க அழகு இன்னும் குறையவே இல்லை என ரசிகர்கள் புகழாரம் சூட்டும் அளவுக்கு கலக்கி வருகிறார்.
இவரது நடிப்பில் படங்கள் வெளியாகும் என்றாலே கொண்டாட்டம் தான், அந்தளவுக்கு சின்ன சின்ன குழந்தைகளை கூட ரசிகராக்கி வைத்துள்ளார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஸா.
இதில் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படம் இயக்கம் தொடர்பான படிப்பை படித்து வருகிறார், தன் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும், இயக்கத்தில் ஆர்வம் இருப்பதாகவும் நடிகர் விஜய்யே சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, தாத்தாவை போன்றே பேரனுக்கும் ஆர்வம் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
SAC - Director , #ThalapathyVijay - Actor , Now Sanjay - Director.
— Shankar (@Shankar018) January 27, 2023
Director Jason Joseph Sanjay ? pic.twitter.com/D2zqz9xkHm