தந்தை விஜய்யின் இன்ஷியலை மாற்றினாரா சஞ்சய்? பின்னணியில் உள்ள உண்மை இதோ
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரைக் குறிக்கும் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் விஜய்
பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா செப்டம்பர் மாதம் விவாகரத்து கேட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் மற்றும் சாஷா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

2021ம் ஆண்டு வரை ஒரே குடும்பமாக வாழ்ந்த வந்த விஜய் சங்கீதா பின்பு வெளியில் சேர்ந்து எந்தவொரு நிகழ்விற்கும் வருவதில்லை. சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
இவர் தனது விவாகரத்து புகாரில் விஜய் வேறொரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை மனதளவில் கஷ்டப்படுத்தியுள்ளதாகவும், அவரது வீட்டில் இருப்பதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய்
சமீபத்தில் சஞ்சய் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அப்பாவின் பேச்சுக்கு மகன் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று விமர்சித்தனர்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் பட இயக்குனராக அறிமுகமாகிவரும் நிலையில், புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.

அதாவது Jason Sanjay S என்ற முறையில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் S என்பது அவரது தாய் சங்கீதாவின் பெயரை குறிப்பதாக இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் இதில் உண்மை என்னவெனில் சஞ்சய், தனது தாயின் இனிஷியலையும் வைக்கவில்லை என்றும் தான் இயக்கும் சிக்மா படத்தின் டீசரில் கூட இனிஷியல் இல்லாமல் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உண்மையிலேயே சஞ்சய் தந்தையின் இனிஷியலை நிராகரிக்கின்றாரா? என்பதை இப்பட ரிலீஸின் போதே தெரியவரும் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இன்ஸ்டாவில் தனது தந்தை விஜய்யை பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தியதாக தகவல் வெளியாகுவது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |